May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கடற்படை பயிற்சி விமானம் கடலில் விழுந்தது

1 min read

The naval training plane crashed into the sea

27/11/2020

இந்திய கடற்படையின் மிக் -29கே பயிற்சி விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி மீட்கப்பட்டு விட்டார். இன்னொருவரை காணவில்லை.

பயிற்சி விமானம்

இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா அரபிக்கடலில் நிறுத்தப்பட்டு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தக் கப்பலில் இருந்து நேற்று (வியாழக்கிழமை ) மிக் – 29கே பயிற்சி விமானம் புறப்பட்டுள்ளது. 2 விமானிகள் அதை இயக்கினார்கள்.
அந்த விமானம் பறந்த சில நிமிடங்களில் அரபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு இவ்விபத்து நடந்ததாக கடற்படை இன்று உறுதி செய்தது.
இந்த விபத்தில் ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டார். மற்றொரு விமானியை காணவில்லை. அவரை தேடும் பணி வான் வழியிலும், தரை வழியிலும் நடைபெற்று வருகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.