April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை வித்யா பாலனை மந்திரி இரவு விருந்துக்கு அழைத்தாரா? திரைஉலகில் பரபரப்பு

1 min read

Did the Minister invite actress Vidya Balan to the dinner? Excitement in the screen world

1/12/2020

நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில மந்திரி இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் அவர் செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்ததாகவும் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

நடிகை வித்யா பாலன்

இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யா பாலன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற படக்குழுவினரின் வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக திரை உலகில பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், இதை மந்திரி விஜய் ஷா மறுத்தார். அவர் கூறும்போது “படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க ‘ஷெர்னி’ படக்குழு என்னை அணுகினர். அவர்கள் தான் என்னை இரவு விருந்துக்கு அழைத்தனர். மராட்டி மாநிலம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறினேன். நான் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை”

என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.