May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சாமி போட்ட சூடு/ சிறுவர் கதை/ சிவகாசி முத்துமணி

1 min read

Sami poota Sudu – story by SIVAKASI MUthumani

2/12/2020

மணி ஒலித்தது. மாலினி மிஸ், மிடுக்காகக் கிளாசுக்குள்ள வந்தாங்க.அது யு.கே.ஜி கிளாஸ். குட்டி ரோஜாக் கூட்டம் எல்லாரும் எந்திரிச்சு, “குட் மார்னிங் மிஸ்” என்று ஒரே குரலில் சத்தமாச் சொன்னாங்க.
“Very good morning,All of you sit down. எல்லாரும் வந்தாச்சா? .ஹேமா, நீ நேத்து ஸ்கூலுக்கு வரலியே! என்னாச்சி?”எங்கப் போன? leave application கூட தரலியே”
“எஸ்… மிஸ்… எனக்கு நேத்து..ரொம்ப காச்சல் மிஸ். அதான் மிஸ் நேத்து வரல”. எழுந்து நின்று தயங்கி இழுத்து இழுத்துச் சொன்னது அக்குழந்தை.

      "ஏ..ஹேமாக்குட்டி,பொய்தானே!சொல்லுற?... .நீ சொல்லும் போதே பொய்ன்னு எனக்கு நல்லாத் தெரியுது. காய்ச்சலுன்னு, பொய் சொல்லிட்டு வீட்ல உட்கார்ந்து டிவி பாத்துட்டுருந்தியா?இல்லாட்டிப் படுத்துத் தூங்கிட்டியா?
     நால்லாப் பொய் சொல்லு.இந்த வயசுலேயே... கூசாம வாயில பொய் வருது. சாமி பாத்துகிட்டுருக்காரு.பொய் சொன்னா, சாமி நாக்குல சூடு போட்டுடுவாரு தெரியுமா?அப்புறம் நாக்குல பெரிய புண் வரும். பிறகு பேசவே முடியாது..அதனால யாரும் பொய் சொல்லக் கூடாது.சரியா?" "ஓகே மிஸ்". எல்லாக் குழந்தைகளும் சேர்ந்து சத்தமா சொன்னாங்க.

 பொய் சொன்ன உணர்வில்,மதியம் சரியாகவே சாப்பிட அந்தக் குழந்தை.சாயங்காலம் பள்ளியிலிருந்து ரிக்க்ஷாவில் வீட்டுக்கு வந்ததும்,"ஏண்டி ஒருமாதிரி இருக்க?. பசிக்குதா?.இந்தா சாப்பிடு",அம்மா கொடுத்த சாக்காலேட்டைத் தின்று விட்டு,"அம்மா எனக்கு இன்னும் ஒரு சாக்காலேட் வேணும்" .ஹேமா கேட்டாள். "கொஞ்சம் பொறு குட்டிமா, அம்மா டிபன் பண்ணித் தரேன் சாக்கலேட் ரொம்ப சாப்பிடக்கூடாது. அப்பா வாங்கிட்டு வந்த சாக்கலேட்.எல்லாம் காலி.இனிமேல் இல்ல". அப்பா வரும்போது வாங்கிட்டு வருவாங்க."அம்மா சொன்னாள் ,
"மம்மி சூடு போடுறதுன்னா என்ன மம்மி?" குழந்தை ஆர்வத்தோடு கேட்டது. "அது எதுக்கு உனக்கு? என்றால் அம்மா." சொல்லுங்க மாமி". மீண்டும் பிள்ளை கேட்டது.சமையல் செய்து கொண்டிருந்தவள் அந்தக் கரண்டியை அடுப்பில் வைத்தாள். "இப்போ இத யார் மேலாவது வச்சா என்ன ஆகும்?" அம்மா கேட்டா." அய்யய்யோ  சுடும், புண்ணு வந்திடுமே"!!!" என்றது குழந்தை." "அதுதான் சூடு வைக்கிறது" என்றாள் அம்மா. " 
      "மம்மி மம்மி, பொய் சொன்னா' சாமி நாக்குல சூடு போடுவாரா?" அம்மாவிடம் கேட்டா ஹேமா. "ஆமா.. கண்டிப்பா போடுவாரு .ஆமா, இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க?இப்போ எதுக்குக் கேக்குற?"என்று அம்மா கேட்டாள்."
    "எங்க மாலினி மிஸ் சொன்னாங்க மம்மி. பொய் சொன்னா சாமி நாக்குல சூடு போடுமாம்,நீ இப்போ சாக்கலேட் இல்லன்னு பொய் சொல்லுரல்ல? அதனால உனக்குச் சாமி சூடு போடுவாரு"சொல்லிட்டு லேசா சிரிச்சிட்டு,தான் வாயைப் பொத்தியது.   அக்குழந்தை.
"ஏ வாலு,நீ நேத்து காய்ச்ச லுன்னு பொய் சொன்னியே , ஸ்கூலுக்கும் போகலையே, சாமிக்குத் தெரியாதுன்னு நெனச்சியா?அப்போ உனக்குத்தான் முதலில் ,சாமி சூடு போடுவாரு"என்று பிள்ளையைச் செல்லமாகக் கிள்ளினாள் அம்மா. "சரி சரி வா டிபன் சாப்பிடலாம்."

ராத்திரி அம்மாகிட்டதான் படுத்துத் தூங்கினாள் ஹேமா. ரொம்ப நேரம் தூக்கம் வரவில்லை. மாலினி மிஸ், அம்மா, காய்ச்சல், பொய், சாமி, சூடு என்று எதை எதையோ நினைத்துக் கொண்டு இருந்தது அந்தப் பிள்ளை. நடுராத்திரியில் திடீர்னு முழிச்சு, அம்மாவின் கையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு”அம்மா இனிமே நான் பொய்யே சொல்லமாட்டேன்”ன்னு சொல்லுச்சு அந்த குழந்தை.”என்னடா செல்லம்?ஹே குட்டி உனக்கு என்னாச்சி.அதுக்கென்ன இப்போ?படு படு.தூங்கு எல்லாம் காலையில் பேசிக்கொள்ளலாம். ஏதாச்சும் கனவு கினவு கண்டியா?என்னம்மா? அம்மா கேட்டா.
“ஆமாம்மா, என்னோட கனவில சாமி வந்தாரும்மா…காச்சல்ன்னு பொய்
சொன்னியா?ன்னு என்னிடம் கேட்டாரும்மா.நான் ஆமா சாமின்னு உண்மையைச் சொன்னேன். சாமி கிட்ட பொய் பேசக்கூடாதுல்ல மம்மி” என்றாள் ஹேமா.
“ஆமா,அப்படியா,? அப்புறம் உன் நாக்குல சாமி சூடு போட்டாரா? சாமி ரொம்ப நல்லவராச்சே உண்மையைச் சொல்றவங்களுக்குச சூடு போட மாட்டார். மன்னிச்சிருவாரு” என்று சொன்னாள் அம்மா .
.”இல்ல மம்மி. சாமி எனக்குச் சூடு போடல… ஆனா..சாமி அவரோட நாக்க நீட்டி என்னிடம் காட்டினாரு… பார்த்தா…அவர் நாக்குல ஒரு பெரிய சூடு,புண்ணு இருந்தது. ஆமாம் மம்மி.நான் பார்த்தேன் மம்மி.பெரிய புண்ணு. ஐயோ சாமிக்கு ரொம்ப வலிக்குமே” .
“ஓ அப்படியா? அப்போ சாமி நாக்குல யாரு சூடு போட்டாங்க?” என்று கேட்டா அம்மா.” சாமி நீ பொய் சொன்னியா? யாரு உனக்குச் சூடு போட்டாங்கன்னு நான் கேட்டேன் மம்மி.நான் பொய் சொல்லல.நீ காச்சல்ன்னு பொய் சொன்னதால, என் நாக்குல சூடு புண்ணு வந்துருச்சுன்னு சாமி சொன்னாரு மம்மி”.நானு காய்ச்சல்ன்னு பொய் சொன்னதால, அவர் நாக்குல சூடு புண் வந்துருச்சு..யாரு பொய் சொன்னாலும் அப்படித்தானாம்.அவர் நாக்குல உடனே சூடு புண் வந்துடுமாம்.. இதை அவரே சொன்னாரு மம்மி. “அப்படியா?” என்று வியப்போடு கேட்டாள் அம்மா.
“அய்யோ பாவம்…சாமி.பாவமில்லம்மா இனிமேல்..நான் பொய் சொல்லமாட்டேன்.நீயும் பொய் சொல்லக் கூடாதுன்னு .அப்பாவும் பொய் சொல்லக் கூடாது. யாருமே பொய் சொல்லக்கூடாது. நாம் பொய் சொன்னா சாமி நாக்குல சூடு புண்ணு வந்துகிட்டே இருக்குமே”.
சொன்ன கள்ளமற்ற தன்பிள்ளைச் செல்வத்தை. தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்அம்மா”.நல்ல பிள்ளை,என் செல்லம், என் பட்டுக் குட்டி நாளைக்கு ஸ்கூலுக்குப் போனதும், பொய் சொன்னதற்காக மிஸ்ஸிடம் சாரி கேளு,சாமிக்குப் புண்ணு எல்லாம் உடனே ஆறிடும்” அம்மா சொன்னா.
.”சரிம்மா. கண்டிப்பா ஸாரி கேட்பேன். நான் சாரி கேட்டா ,நிச்சயம் சாமிக்குப் புண்ணு ஆறிடுமில்ல?” என்று ஆர்வத்தோடு கேட்டது, ஹேமா என்ற நாலு வயது குழந்தை…. இல்லை இல்லை, நாலு வயது தெய்வம்…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.