கொரோனாவுக்கு இளம் நடிகை பலி
1 min readYoung actress kills Corona
7/12/2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை இறந்தார்.
நடிகைக்கு கொரோனா
இந்தியில் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34). யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டெலிவிஷன் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சாவு
இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.