September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சரத்குமாருக்கு கொரோனா; ஐதராபாத் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Corona to Sarathkumar; Admitted to Hyderabad Hospital

8/12/2020

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அவர் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரத்குமார்

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்த நோய் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் பாடாய் படுத்துகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது கொரோனா சற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர் தெலுங்கு சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர் படப்பிடிப்புக்கா ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது அவருக்கு தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை இருந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா டெஸட் எடுக்ப்பட்டது. அப்போதுதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தகவலை நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “எனது கணவர் சரத்துகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பதால் ஐதராபாத்தில் பிரபலமான ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர் கைதேர்ந்த டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறா. அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

சரத்குமாரின் மகளும் நடிககையுமான வரலட்சுமியும் இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

சரத்துகுமார் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். அவருக்கே கொரோனா வந்துள்ளதா என்று ரசிகர்கள் பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கன்னட நடிகைக்கு கொரோனா

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நடிகை மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது பெற்றோரும், நானும் எனது குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறோம. எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்'” என்று பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.