September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டரா?

1 min read

Did television actress Chitra commit suicide? Was he murdered

9/11/2020

டெலிவிஷன் நடிகை தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை சித்ரா

டெலிவிஷனில் தொகுப்பாளராக பங்கேற்று சின்னத்திரை நடிகையாக விளங்கியவர் சித்ரா. இவர் பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் தொடரில் நடித்து வந்தார். அதன் மூலம் ரசிகர்கள்மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவருக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர்தான் மாப்பிள்ளை. அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று காலையில் செய்தி வெளியானது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கில் பிணமாக தொடங்கினார். அவருக்கு வயது 28

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்துவந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டலில் தங்கியது ஏன்?

நடிகை சித்ராவின் வீடு திருவான்மியூரில் உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடத்தவந்தார் அல்லவா? அதற்கான படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். தினமும் திருவான்மியூரில் இருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தினமும் அந்த ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

நேற்று நள்ளிரவுக்கு பின்பும் படப்பிடிக்குப்பு நடந்தது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். அவரும் வெளியே சென்று விட்டாராம். சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

கொலை செய்யப்பட்டாரா?

இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

காயங்கள்

நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீசார் மேலும் கூறும்போது, தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.