June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

நயன்தாரா-விக்னேஷ்சிவன் புத்தாண்டு கொண்டாட்டம்

1 min read

Nayantara-Vigneshchivan New Year Celebration

1.1.2021

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா

நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்தே பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

சினிமா நடிகர்கள் 2021 புத்தாண்டு தினத்தை கொண்டாடினர். சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா& விக்னேஷ் சிவன் ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியது.
நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம்.
இந்த ஆ£ண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *