மாஸ்டர் படம் தொடர்பாக நடிகர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு
1 min read
Rejection of actor Vijay’s request regarding the master film
1.1.2021
மாஸ்டர் படம் தொடர்பாக அரசிடம் நடிகர் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மாஸ்டர் படம்
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படது.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாக உள்ளது. அந்த படத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தார் எதிர்பார்த்த வசூல் ஆகாது.
எனவே இந்த நிலையை மாற்றி 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சமீபத்தில் முதல்&அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஊரடங்கை ஜனவரி 31&ந் தேதி வரை நீட்டித்து முதல்&அமைச்சர் உத்தரவிட்டார். இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் எண்ணிக்கை 50 சதவீதம் என்ற நிலையே நீடிக்கிறது. அதில் எந்த தளர்வும் கொடுக்கவில்லை.
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவின்போது, தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும், ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடலாம் என்றும் திரைத்துறையினர் எண்ணியிருந்தனர். இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.