June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகம் ஓடிடி-ல் வெளியாகிறது

1 min read

Trishyam-2 will released on ODT

1.1.2021

மலையாள படமான ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார்.

திரிஷ்யம்-2

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாள படமான திரிஷ்யம் வெற்றிகரமாக ஓடியது. மோகன்லால், மீனா நடித்த இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.
திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

2ம் பாகம்

திரிஷம் படம் வெளியான 7 வருடங்களுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இந்தப் படத்திலும் மோகன்லால்தான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தின் டீசரை வெளியிட்ட மோகன்லால். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை விரைவில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *