May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் 200 சதவீதம் பாதுகாப்பானது; பாரத் பயோடெக் தலைவர் கூறுகிறார்

1 min read

The corona vaccine is 200 percent safe for covax; Says Bharat Biotech Chairman

4.1.2021

கொரோனா தடுப்பூசி கோவாக்சின் 200 சதவீதம் பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலா கூறி உள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:&

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுகிறது. ஏற்கனவே 16 தடுப்பூசிகளை தயாரித்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. 123 நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

தடுப்பூசி தொடர்பான தரவுகள் பற்றி 70க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சர்வதேச பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்

200 சதவீதம்

கோவாக்சின் 200 சதவீதம் பாதுகாப்பானது. இது ஒரு இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் உலகில் உள்ள அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது மற்ற தடுப்பூசிகளில் காட்டப்படும் 60-70 சதவீத பாதகமான பக்க விளைவுகளுடன் ஒப்பிடும்போது கோவாக்சின் 10 சதவீத பாதகமான விளைவுகளைத்தான் காட்டி உள்ளது.

இந்த பக்கவிளைவுகளை போக்க அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி எடுத்தவர்களுக்கு 4 கிராம் பராசிட்டமால் மாத்திரைகள் வழங்கி உள்ளது. நாங்கள் எந்தவொரு தன்னார்வலருக்கும் பாராசிட்டமால் கொடுக்கவில்லை. எங்கள் தடுப்பூசி 200 சதவீதம் பாதுகாப்பானது என்று என்னால் உறுதியளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.