May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

விதியை மீறி சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதிப்பதா?- மத்திய உள்துறை கேள்வி

1 min read

Is it allowed 100 per cent in cinema theaters in violation of the rule? – Central Interior Question

6.1.2021

விதியை மீறி சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது ஏன் என்று மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சினிமா தியேட்டர்

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நடிகர்கள் விஜய், சிம்பு மற்றும் தியேட்டர்கள் அதிபர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு சினிமாத் துறையில் பலர் வரவேற்றாலும் பல்வேறு தரப்பில் இருநது கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

கடிதம்

இந்த நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், “தமிழக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.