புதிய உச்சத்தைத் தொட்ட விஜய் வாத்தி கம்மிங் பாடல்
1 min read
Vijay Vathi cumming song touches new heights
6.1.2021
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மாஸ்டர் படம்
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கலையொட்டி வருகிற 13ந் தேதி திரைக்கு வருகிறது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்தப் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.