May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

குடும்பத்தலைவிக்கு சம்பளமா?- கமலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்

1 min read

Salary for the head of the family? – Actress Kangana Ranawath condemns Kamal

6.1.2021

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு சம்பளம் வழங்குவோம் என்று அறிவித்த கமல்ஹாசனுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தேர்தல் பிசாரசம் செய்தபோது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தலைவிகளுக்கு, மாதச் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதனை பலர் வரவேற்று உள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எம்.பி.,யுமான சசி தரூர் கூறும்போது, “கமல்ஹாசனின் யோசனையின்படி, வீட்டு வேலைகளையும், ஒரு பணியாக அங்கீகரிப்பதோடு, அவற்றை செய்யும் இல்லத்தரசிகளுக்கு, அரசாங்கமே சம்பளம் தருவது என்பது, மிகுந்த வரவேற்புக்குரியது. இல்லத்தரசிகளின் உழைப்பு, பணமாக மாறுவதோடு, சமூகத்தில் நல்லதோர் அங்கீகாரமும், அவர்களுக்கு கிடைக்கும்.” என்றார்.

நடிகை கண்டனம்

ஆனால் கமல்ஹாசனின் இந்த அறிவிப்புக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளாதாவது:&
எங்களது அன்பான உறவுகளுக்கு பணிவிடை செய்வதற்கு, விலை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு சொந்தமானவர்களை, நாங்கள் தாயைப் போல கவனித்து கொள்வதற்கு, சம்பளம் தர வேண்டாம். எங்கள் மாளிகையில், நாங்கள் இல்லத்தரசிகளாக இருப்பதற்கு கூலி தேவையில்லை.
அனைத்தையுமே வர்த்தகமாக பார்க்காதீர். எங்களிடம், உங்களை ஒப்படைத்து விடுங்கள். பதிலுக்கு, உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், மரியாதையையும் மட்டுமே.
இவ்வாறு நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.