May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே

1 min read

Pooja Hegde paired with Vijay in ‘Commander 65’

5-1-2021

விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் 65-&வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பூஜா ஹெக்டே

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸ§டன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.