May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அனுமன் அபார பலம்பெற்றது எப்படி?

1 min read

How did Hanuman become immensely strong?

11/1/2021
அனுமனின் பலம் அவருக்கே தெரியாது என்பார்கள். அவருக்கு இத்தனை பலம் எப்படி வந்தது?
அஞ்சனைக்கும்&வாயுவுக்கும் பிறந்த மகன்தான் அனுமன் என்பார்கள். ஆனால் சிவபெருமானின் சக்தியால் பிறந்தவர்தான் அனுமன்.
அஞ்சனையே சிவபெருமானின் வரத்தால் பிறந்தள்தான். திரேதாயுகத்தில் குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அப்போது அவர் முன் சிவபெருமான் தோற்றி உனக்கு எல்லா அம்சமும் கொண்ட பெண் குழந்தை (அஞ்சனை) பிறக்கும். அவளுககு பிறக்கும் மகன் சர்வ வல்லமை படைத்தவனாக இருப்பான் என்று வரம் அளித்தார். அதன்படி குஞ்சரனுக்கு மகளாக அஞ்சனை பிறந்தாள். அவர் சேகரி என்ற வானர மன்னனை மணந்து கொண்டாள். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
அஞ்சனை ஒரு சிவ பக்தை. அவள் குழந்தை வரம் வேண்டி எப்போதும் சிவனை நினைத்து வழிபட்டு கொண்டு இருப்பார். இந்த நிலையில் அயோத்தியில் தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திரகாம வேள்வி நடத்தினார். சிவபெருமானின் அருளால் யாகத்தில் இருந்து அவருக்கு தெய்வீக பாயாசம் வந்தது. தசரதர் அதை எடுத்து தன்னுடைய மூன்று மனைவியருக்கும் கொடுத்தார். இதனால் அவருக்கு ராமர், லட்சுமணன், பரதன், மற்றும் சத்துருக்கன் ஆகிய 4 மகன்கள் பிறந்தனர் என்றும் கூறுகிறது.
தசரதர் பாயாசம் பெற்றபோது ஒரு பருந்து அதன் ஒரு பகுதியை எடுத்துச் சென்றது. அந்தப் பாயசத்தின் ஒரு பகுதி கீழே சிந்தியது. அதை வாயுபகவான் எடுத்து அஞ்சனையிடம் வழங்கினார். அதை உண்டதால் பிறந்த மகன்தான் அனுமன்.
அனுமன் குழந்தையாக இருந்த போது ஒருநாள் கடும் பசி எடுத்தது. அவன் வானில் இருந்த சூரியனை பழம் என்று நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அனுமனது முகத்தில் அடித்தார். இதில் சிறுவன் அனுமன் இறந்துவிட்டான்.
தன்-னுடைய மகன் கொலை செய்யப்பட்டதை அறிந்த வாயு ஆத்திரம் அடைந்து உலகில் காற்-று இல்லாமல் ஆக்கினார். இதனால் இந்தப் பிரச்சினையை சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர்.
அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என சிவன் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என இந்திரன் வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற தேவர்களான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். பிரம்மாவும் அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். மகாவிஷ்ணு “கதா” என்னும் ஆயுதத்தை வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.