தமிழகத்தில் கொரோனா 700க்கும் கீழே குறைந்தது
1 min read
In Tamil Nadu the corona is below 700
11.1.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் 700க்கும் கீழே குறைந்தது. இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக தினமும் 800க்கும் குறைவாகவே கொரோனா பதிவானது. இன்று 700க்கு கீழே கொரோனா பதிவாகி இருக்கிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று ( திங்கட்கிழமை) 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 869 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.
கேரளா
–கேரளாவில் எதிர்பார்த்த அளவு இன்னும் கொரோனா தாக்குதல் குறையவில்லை. அந்த மாநிலத்தில் இன்று( திங்கட்கிழமை) 3,110 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 3 ஆயிரத்து 922 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் கொரோனாவுக்கு தாக்குதலுக்கு இன்று 20 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியம்
மராட்டிய மாநிலத்தில் இன்று 2,438 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 71 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாநிலத்தில் 52 ஆயிரத்து 288 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4,286 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 67 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று 40 பேர் உயிரிழந்தனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.