பொங்கல் பரிசு 2,500 ரூபாயை 25-ந் தேதி வரை வாங்கலாம்
1 min read
Pongal prizes of Rs 2,500 can be purchased till the 25th
11.1.2021
பொங்கல் பரிசு தொகையான 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 25- ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு ரூ-. 2500
தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி பொங்கல் பரிசாக ரூ.2,500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 13-ந்தேதி வரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
25-ந் தேதி வரை
இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபாடின்றி வழங்க எதுவாக பொங்கல் பரிசு வழங்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 18ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.