May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,689 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 12,689 people in a single day in India yesterday

27.1.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,689 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து இன்று ( புதன்கிழமை) மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதவாது நேற்று (செவ்வாய்க்கிழமை) 12,689 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,06,89,527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 13,320 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,03,59,305 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் 137 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 1,53,724 கொரோனவுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 176498 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 16-ந் தேதியில் இருந்து தற்போது வரை 20,29,480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.