டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலைதான் செய்தார்; நிபுணர் குழு அறிக்கை
1 min readTelevision actress Chitra committed suicide; Expert Panel Report
2.2.2021
டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று- நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகை சித்ரா
டெலிவிஷன் நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கணவர் ஹேம்நாத்தை கைது செய்தார்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோ£ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நிபுணர் குழு
அப்போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது. மேலும் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். மேலும் வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.