November 29, 2026

Seithi Saral

Tamil News Channel

5-வது காசி தமிழ்ச் சங்கமம் விழா: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

1 min read

5th Kashi Tamil Sangamam event: Vice President C.P. Radhakrishnan inaugurates the festival

28.11.2026
தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான பழமையான பண்பாடு, கலாசாரம், மொழி மற்றும் நாகரிகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் 5-வது காசி தமிழ்ச் சங்கம விழா இன்று தொடங்கியது. விழாவை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கம விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 5-வது விழா இன்று தொடங்கி டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவின் கருப்பொருளாக ‘திருக்குறள் பயில்வோம்’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து 1,400-க்கும் மேற்பட்டோர் 7 குழுக்களாக பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இடம்பெற்றுள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வேளாண்துறை நிபுணர்கள், கலைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

விழாவில் பங்கேற்பவர்கள் தங்களது பயணத்தின்போது 4 நாட்கள் சுற்றுலா தொடர்பான நிகழ்ச்சிகளிலும், 4 நாட்கள் இதர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளனர்.

இதன்படி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சாரநாத், ராம்நகர் கோட்டை, பாரத மாதா கோவில் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட உள்ளனர். மேலும், கங்கை ஆரத்தி, புனித நீராடல், கல்வி சார்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் உத்தரபிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறளைக் கற்பிக்க உள்ளனர். திருக்குறளின் 1,330 குறள்களையும் 22 இந்திய மொழிகளில் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழாவை மத்திய உயர்கல்வி அமைச்சகம், சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், தமிழ்நாடு அரசு, உத்தரபிரதேச அரசு மற்றும் மத்திய கலாசார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

தமிழகத்தில் இருந்து காசி தமிழ்ச் சங்கம விழாவில் பங்கேற்பதற்கான முதல் குழுவினருக்கான சிறப்பு ரெயில் கடந்த 25-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று இரவு பனாரஸ் (வாரணாசி) சென்றடைந்தது.

2-வது குழுவினருக்கான சிறப்பு ரெயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. தமிழகத்தில் இருந்து 7 குழுக்களாக பங்கேற்கும் அனைவரும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *