May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அறிவோம் தேர்தல் வரலாறு/ அண்ணா அதிர்ச்சி தோல்வி

1 min read

We know election history / Anna shock defeat

1962 தேர்தலில் 50 இடங்கள் கிடைத்தது திமுகவுக்கு உற்சாக டானிக் ஆக அமைந்தாலும், அதன் பொதுச்செயலாளரான அண்ணா, காஞ்சீபுரத்தில் தோற்றது
பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
1957&ல் திமுக வென்ற 15 தொகுதிகளையும் குறி வைத்த காமராஜரின் வியூகம் வென்றது. காஞ்சீபுரத்தில் பிரபல பஸ் அதிபரான நடேசமுதலியாரிடம் (காங்) 9,190 ஓட்டு வித்தியாசத்தில் அண்ணா தோல்வியைத்தழுவினார். மற்ற 14 தொகுதிகளிலும் திமுகவை காமராஜரால் தோற்கடிக்க முடிந்தது.
ஆனால் ஒரே ஒருவரை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை. அவர் தான் கலைஞர் மு. கருணாநிதி. 57&ணீனீஜீ;ல் குளித்தலையில் வெற்றி பெற்ற அவர், 62&ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கும் அவரைத் தோற்கடிக்க, பிரபல தொழில் அதிபரான பரிசுத்த நாடாரை காமராஜர் களம் இறக்கினார். பரிசுத்த நாடாரை ஆதரித்து திக தலைவர் பெரியாரும் பிரசாரம் செய்தார். ஆனாலும் கருணாநிதியின் வெற்றியை இருபெரும் தலைவர்களாலும் தடுக்கமுடியவில்லை. செல்வாக்குமிக்க பரிசுத்தநாடாரையே தோற்கடித்தார், கருணாநிதி.
வாக்குகள் விவரம்:

கருணாநிதி 32,145,

பரிசுத்தநாடார் 30,217.
=மணி, திருநெல்வேலி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.