April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை; 100 சதவீதத்தை எட்டுவது எப்படி?

1 min read

One crore 71 lakh people did not drive; How to reach 100 percent?

8.4.2021

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை

சட்டசபைத் தேர்தல்

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதம் பதிவாகியுள்ளன. தொகுதி அளவில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகின.

பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது, 4 கோடியே 57 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றனர். ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை. கொரோனா பரவல் அச்சம், வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சொந்த ஊருக்கு…

வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசிநிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் பெரும்பாலானோர், கொரோனா காலத்தில் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பலர் சொந்த ஊரில் வீட்டில் இருந்துகொண்டே கம்ப்யூட்டர் மூலம் வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு சென்னையில்தான் ஓட்டு இருக்கிறது என்றாலும், ஓட்டு போட மெனக்கெட்டு செல்ல வேண்டுமா என்ற யோசனையில் வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இவைதான் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகின்றன.

100 சதவீதம் எப்படி?

அது மட்டும் அல்ல… தொழில் நிமித்தமாக வெளியூர்களில் இருக்கும் தங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை சொந்த ஊரிலேயே வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு ஓட்டும் சொந்த ஊரில்தான் இருக்கும். அவர்கள் ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல மாட்டார்கள். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும் ஒரு நாளில் சென்று திரும்ப முடியாது. மேலும் அதற்கு செலவும் அதிகரிக்கும். எனவே தேர்தலை நாளை விடுமுறை நாளாக நினைத்து கொண்டாடுவார்கள்.
இப்படி இருக்கும்போது எப்படி 100 சதவீத வாக்குப்பதிவு நடக்கும்.
இந்த முறை 80 வயதை கடந்தவர்களும் மாற்றுத்திறனாளிகளும் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடலாம் என்று அறிவித்தார்கள். இது சிறப்பான ஏற்பாடு.
அதேபோல் யார் எந்த ஊரில் இருந்தாலும் அங்கிருந்தபடியே ஓட்டுப்போட வழிவகை செய்ய வேண்டும். தற்போது இணைய தள வசதி, ஓடிபி வசதி வந்துவிட்டது. அதன் மூலம் எங்கிருந்தாலும் ஓட்டுப்போட வசதியை ஏற்படுத்தலாம்.
இதில் அரசியல் கட்சியினர் மிரட்டி தங்களுக்கு ஓட்டுப்போட வைப்பார்கள் என்று நினைக்கலாம். வெளி மாநிலம், வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் ஆன் லைனில் ஓட்டுப்போட அ-னுமதித்துவிடலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.
சொந்த மாநிலத்தில் அதே நேரம் வெளியூர்களில் இருப்பவர்களுக்கு அந்த ஊரில் இருக்கும் வாக்குச்சாவடியில் சென்று ஓட்டுபபோட வசதி செய்யலாம். அதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி( தற்போது கொரோனா நோயாளிகளுக்கா நேரம் ஒதுக்கப்பட்டது போல்…) அந்த நேரத்தில் ஓட்டுப்போட வைக்க வேண்டும். இதில் வாக்குச்சாவடிக்குள்ளேயே இணைய தள வதியை பயன்படுத்தலாம்.
இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.