April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒளிப்பதிவு சட்ட திருத்த என்ன சொல்கிறது?

1 min read

What does the cinematography frame edit say?

7.7.2021
“மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021” கொண்டுவந்துள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள ஒளிப்பதிவு சட்டத்தில் தித்தம் கொண்டு வந்து அதை பொதுமக்களின் கருத்துக்கு வெளியிட்டது-. பொதுமக்கள் அது தொடர்பான விருப்பம், ஆட்சேபனைகளை கடந்த (ஜூலை) 2&ந் தேதிக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தது.
அதன்பின் அந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னரே இந்த சட்ட திருத்த அமலுக்கு வருகிறது.
இந்த சட்டம் முழுக்க முழுக்க சினிமா தொடர்புடையது. அந்த சட்டத்தில்
4 விதமான திருத்தங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன.
அதில் உள்ள திரைப்படங்களுக்கு சான்றிதழ் கொடுப்பது தொடர்பானது. தற்போது தணிக்கை குழு சினிமா படத்திற்கு 3 விதங்களில் சான்று அளிக்கிறது. அதாவது அனைவரும் பார்க்க தகுந்த படமாக இருந்தால் அதற்க யூ சான்றிதழ் கொடுக்கிறது.
12 வயதுக்குள் உள்ளவர்கள் பாக்கக் கூடாதது என்றால் அதற்கு யூஏ சான்றிதழ் கொடுக்கும்.
வயது வந்தோர் மட்டுமே பார்க்க கூடிய படத்திற்கு ஏ சான்று கொடுக்கும்.
இப்போது வரைவு சட்டத் திருத்ததில் 4 விதமாக சான்று அளிக்கப்பபடும்.
அதவாது 7 வயதுக்கு உள்பட்டோர், பெற்றோருடன் மட்டுமே பார்க்ககூடிய படம்.
13 வயதுக்குள் உள்ளவர்கள் பெற்றோருடன் மட்டுமே பாக்ககூடிய படம்.
16 வயதுக்கு உள்பட்டோர் பெற்றோருடன் மட்டுமே பார்க்க கூடிய படம்.
இதுதவிர வயதானவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஏ சான்ற படம்.

ஒரு முறை மட்டுமே சான்று

ஒரு படத்திற்கு சான்றிதழ் பெற்று விட்டால் 10 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லும் அதன்பின் புதுப்பிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத் திருத்தத்தில் ஒரு முறை சான்றிதழ் பெற்றுவிட்டால் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்து சினிமாவில் திருட்டை ஒழிக்க வேண்டியதற்கான திருத்தம். சினிமாவில் ஒருவருக்கு உள்ளதை உரியவர் அனுமதி இல்லாமாமல் யாரும் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு செய்யக்கூடாது. அப்படி தெரியாமல் திருடிவிடால் அவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் உட்பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. ஒருவர் சினிமாவில் ஏதாவது ஒரு அம்சத்தை திருடிவிட்டால் அவருக்கு குறைந்த பட்சம் 3 மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்த பட்சம் 3 லட்சம் அல்லது தயாரிக்கப்பட்ட செலவில் 5 சதவீதம் இதில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.

4வது சட்ட திருத்தம்

ஒரு முறை தணிக்கை செய்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் மத்திய அரசு சந்தேகப்பட்டால் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தலாம். இதைத்ததான் பலர் எதிர்க்கிறார்கள்.
இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று நடிகர் கமல்ஹாசன், சூரியா, கார்த்தி போன்றவர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரம் இந்த சட்டத் திருத்தத்தை பலர் வரவேற்றுள்ளனர். படத்தை எடுப்பவர்கள் அரசையோ தனிநபரையோ ஒரு குழுவையோ முறையின்றி உண்மைக்கு புறம்பாக விமரிக்கிறார்கள். வெளிவந்த பின்னர் அந்த தவறு தெரிந்தால் அதை தடுப்பதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். மேலும் பலபடங்களில் கதை திருட்டு நடப்பதாகவும் அதை தடுக்கவும் திருடுபவர்களுக்கு தண்டனை கொடுக்க இந்தச் சட்டத் திருத்தம் உதவும் என்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.