June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்றை கொரோனா 8,636 ஆக உயர்வு

1 min read

In Tamil Nadu, the corona has risen to 2,636 today

16.4.2021

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 8,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், இன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று( வெள்ளிக்கிழமை) 97,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவ¬ கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,96,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 33 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 11 பேரும், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கன்னியாகுமரி, கோவை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை

சென்னையில் இன்று மேலும் 2,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர அதிகபட்சமாக செங்கல்பட்டு 795 பேர், கோவை 583 பேர், திருவள்ளூர் – 453 பேர், காஞ்சிபுரம் – 303 பேர், தூத்துக்குடியில் 277 பேர், திருச்சியில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் 214 பேருக்கும், தென்காசியில் 61 பேருக்கும், தூத்துக்குடியில் 277 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *