May 28, 2024

Seithi Saral

Tamil News Channel

பக்தர்கள் இன்றி நடந்த மதுரை மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம்

1 min read

Madurai Meenakshiamman wedding held without devotees

24.4.2021

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-
சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்களின் இன்றி இன்று நடந்தது. இணையதளம் மூலம் பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. வழக்கமாக இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமகா பக்தர்கள் இன்றி சாமி வீதி உலா கோவிலுக்கள் இருக்கும் ஆடி வீதியில் மட்டும் நடக்கிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வியாழக்கிழமை பட்டாபிஷேகமும், நேற்று திக்குவிஜயமும் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

விழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடந்தது
எப்போதும் மீனாட்சி திருக்கல்யாணம் வடக்குமேல ஆடி வீதியில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். ஆனால் இந்த முறை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது. இதற்காக மண மேடை பல லட்ச ரூபாய் மதிப்பில் வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வரப்பெற்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருக்கல்யாண நிகழ்வுகளை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருக்கல்யாண நிகழ்வுகள் அனைத்தும் கோவில் இணையதளம் மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.