June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

மாற்றுத்திறனாளி அக்காவுக்கு வாழ்வு கொடுத்த தங்கை

1 min read

The sister who gave life to the disabled sister

18.5.2021

ஒரே வாலிபரை அக்காள் மற்றும் தங்கை இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அக்காளுக்கு திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்தார் தங்கை.

மாற்றுத்திறனாளி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவரது தங்கை லலிதா.

மாற்று திறனாளி என்பதால் சுப்ரியாவை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது.

அக்காவுக்காக..

இந்த நிலையில் மாற்று திறனாளி என்பதால் எனது அக்காவை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என்றும், இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா கூறியதாக தெரிகிறது.

பின்னர் இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை திருமணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார்.

இருவருக்கும் தாலி கட்டினார்

அதன்படி நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர்.

மேலும் மாற்று திறனாளி அக்காளுக்கு தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *