June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் 2.40 லட்சம் பேருக்கு கொரோனா வில் ஒரே நாளில் 2.40 லட்சம் பேருக்கு கொரோனா

1 min read

Corona for 2.40 lakh people in a single day in India

24-5-2021
இந்தியாவில் ஒரே நாளில் 2.40 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் புதிய தொற்று மேலும் குறைந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,65,30,132 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3741 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,99,266 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,34,25,467 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,55,102 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 88.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28.05 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 28,05,399 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 19,50,04,184 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *