May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து; தமிழகத்திலும் ரத்து ஆகுமா?

1 min read

CBSE Plus 2 general election canceled; Will it be canceled in Tamil Nadu too?

1.5.2021
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்திலும் ரத்து ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ.


கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்..

தமிழகத்திலும் பிளஸ்-2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.