June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் பெயர் பரிந்துரை

1 min read

Nomination of a former Supreme Court judge for the post of Chairman of the National Human Rights Commission

1.6.2021

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில்தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு அருண் மிஸ்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெரயரை தேர்வுக்குழு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உயர்மட்ட குழுவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *