May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு ஆனது

1 min read

The number of people recovering from corona infection in India has more than doubled

1.6.2021

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோ

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,27,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,795 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,287 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,59,47,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18,95,520 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

==

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.