June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா குறைந்தது; 351 பேர் சாவு

1 min read

Corona less than 20,000 in Tamil Nadu; 351 deaths

7.6.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. இன்று 351 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 17 நாட்களாக பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 26 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது வரை 2,88,92,497 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 10,763 பேர் ஆண்கள், 8,683 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 31,360 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,97,299 ஆக உயர்ந்தது.

391 பேர் சாவு

இன்று 351 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் சென்னையில் 1530, கோவை 2564, ஈரோடு 1646, திருப்பூர் 1027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை

நெல்லை 202 பேருக்கு இன்று கொரோனா பாதித்த நிலையில் இன்று கொரோனாவுக்கு மரணம் இல்லை. தென்காசியில் 230 பேர் இன்று பாதிக்கப்பட்டனர். இன்று கொரோனா மரணம் இல்லை. தூத்துக்குடியல 326 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 6 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *