August 9, 2026

Seithi Saral

Tamil News Channel

குடித்துவிட்டு மணமகளை நடனமாட அழைத்த மாப்பிள்ளையால் திருமணம் நின்றது

1 min read

The marriage was stopped by the groom who invited the bride to dance after drinking

7/6/2021
மணமகளை நடனமாடும்மாறு கூறி குடித்து விட்டு கலாட்ட செய்த மணமகனால் திருமணத்தை மணமகள் நிறுத்தினார்.

திருமணம்

உத்தரபிரதேசம் பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் திக்ரி கிராமத்தில் ஒரு விவசாயி தனது 22 வயது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து இருந்தார். மணமகன் ரவீந்திர படேல் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்து இருந்தார்.

திருமணத்திற்கு முன் மண்மகளை மணமகன் நடனமாடுமாறு கூறினார். ஆனால் மணமகள் மறுத்து விட்டார். இது மணமகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு வந்து, மணமகள் நடனம் ஆடவில்லை எனக்கூறி கலாட்டாவில் ஈடுபட்டார்.
திருமணமத்தை நிறுத்தினார்

அவரது நடத்தையால் ஆத்திரமடைந்த அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
இதை தொடர்ந்து மணமகன் வீட்டார் அங்கிருந்து ஓடிவிட முயன்றனர். ஆனால் மணமகள் வீட்டார் மணமகனையும் அவரது குடும்பத்தினரையும் சிறைபிடித்தனர்.
இதனை அடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மணமகன் திருமணத்திற்காக வாங்கிய பணத்தையும் பரிசு பொருட்களையும் திருப்பி தர சம்மதித்ததை தொடர்ந்து அவர்களை மணமகள் வீட்டார் விடுவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *