May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம்போல் கத்திய நாய்குட்டி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kananayiyram pool kathiya naay/ short story by thabasukumar

11/6/2021
கண்ணாயிரத்தைகடித்த நாய்குட்டிக்கு காய்ச்சல் அடித்ததால் பரபரப்புஏற்பட்டது. கண்ணாயிரத்துக்கு கொரானா இருக்குமோ என்ற சந்தேகம்ஏற்பட்டது. உடனே அவரை மடக்கி பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்துசென்றனர். கண்ணாயிரத்தை கடித்த நாய்குட்டிக்கு சொந்தக்காரர் டாக்டரிடம் புலம்பினார். அவர் முகக்கவசம் மாட்டியிருந்ததால் அவர் சொல்வது டாக்டருக்குசரியாக கேட்கவில்லை. பின்னர் கஷ்டப்பட்டு டாக்டருக்கு புரியும்படி சொன்னார். கண்ணாயிரத்துக்கு கொரானா இருக்கலாம். அதனால்தான் அவரை கடித்த என் நாய்குட்டிக்கு காய்ச்சல் அடிக்குது. எனவே கண்ணாயிரத்துக்கு கொரானா செக்கப் செய்யணும் என்று விளக்கினார். கண்ணாயிரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணாயிரத்துக்கு கொரானா இருக்கிறதா
என்றுசெக் பண்ணும்படி நர்சுகளுக்கு டாக்டர் உத்தரவிட்டார். உடனே கண்ணாயிரம் தனிஅறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரது வாயில் குச்சியை விட்டு சோதித்தார்கள். பின்னர் மூக்கில் குச்சியைவிட்டு பரிசோதித்தனர். சிறிதுநேரத்தில் ரிசல்ட்சொல்வோம் என்று கண்ணாயிரத்தை அனுப்பி வைத்தார்கள். அவர் வெளியே வந்தார். அவர்மனைவி அவருக்கு ஒரு முகக்கவசம் வழங்கினார். கண்ணாயிரத்துக்கு கண்ணை கட்டியது. முகக்கவசத்தை வாங்கிமாட்டினார். ரிசல்ட் என்ன வரப்போகிறதோ என்று பதட்டத்தில் இருந்தார். அவருடன் வந்தவர்களோ வெகுதூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். நிமிடங்கள் ஓடியது. கண்ணாயிரத்துக்கு மனசு திக் திக் என்றுஅடித்துக் கொண்டது. அவரது மனைவி என்னங்க நாயை போய் ஏன்கடிச்சிங்க என்று வார்த்தை தடுமாறி கேட்டார். கண்ணாயிரம் துடித்துபோய் விட்டார். ஏய் நாயை நான் கடிக்கவில்லை. நாய்தான் என்னை கடித்தது.
நீகதையையே மாத்துறீய.. என்று படபடத்தார்.
உடனே அவரது மனைவி அவசரமாக நான்தான் தப்பா சொல்லிட்டேன். சரி நாயை ஏன் அடிச்சீங்க என்று கேட்டார். அதற்கு அவர் நாய் துரத்துச்சு அதனால கல்லால் அடிச்சேன் என்றார்.
அவரது மனைவி அப்படியா என்றார். அவருக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. நாயைபற்றி பேசினாலே கோபம் அதிகமாக வந்தது. அந்த நாயுக்கு எதுஎன்றாலும் அதுக்கு நான்தான் காரணமா என்று ஆவேசமாக கேட்டார். அது இருக்கட்டும் முதல் கொரோனா ரிசல்ட் என்னாச்சுன்னு பாருங்க என்றார் அவர் மனைவி.
அங்கே நாய்குட்டியுடன் நின்றவர், அவசரப்படாதீங்கம்மா… நல்லா டெஸ்ட் பண்ணட்டும் அப்பத்தான் கொரோனாவை கண்டுபிடிக்க முடியும் என்றார்.
இந்த தொந்தரவு வேற தாங்க முடியல என்ற கண்ணாயிரம் அந்தநாய்க்குட்டியை உற்றுப்பார்த்தார். அது அதிகம்சோர்வாக காணப்பட்டது. இதுவேறு செத்துதொலைச்சிடக்கூடாதே. ஏங்க நாய்குட்டியை முதலில் கால்நடைஆஸ்பத்திரியிலே காட்டுங்க. ரொம்ப சோர்வாக இருக்கு என்றார் கண்ணாயிரம். ஆனால் நாய்குட்டிக்கு சொந்தகாரரோ உங்களுக்கு கொரானா டெஸ்ட்டு ரிசலட்டு வந்தபிறகுதான் போவேன் என்றார். கண்ணாயிரம் உடனே அய்யோ போகமாட்டங்கிறாற. தேர்தல் ரிசலட்டு மாதிரி அல்லவா கேட்கிறாரு. இவரைஎப்படிசமாளிக்கபோறேனோஎன்று பிதற்றிக் கொண்டிருந்தார்.
அப்போதுகண்ணாயிரம் யாரு உள்ளே கூப்பிடுறாங்க என்று ஒருவர் கூறினார். உடனே கண்ணாயிரம் கையை தூக்கியபடி நான்தான் கண்ணாயிரம் என்று கூறியபடி உள்ளே சென்றார். அவரிடம் உங்களுக்கு கொரானா டெஸ்டில் நெகட்டிவ் என்று வந்திருக்கு என்று கூறினார்.
நெகட்டிவா.. அய்யய்யோ.. என்று பதறினார் கண்ணாயிரம்.
என்னங்கள் சந்தோஷப்படுங்க.. ஏன் பதருறீங்க.. உங்களுக்கு கொரோனா இல்லைன்னுதானே ரிசல்ட் வந்திருக்கு…
ஓ… நெகட்டிவ்ன்னா இல்லைன்னு அர்த்தமா? அதன் பிறகு அதற்கான சான்றிதழை வாங்கிய கண்ணாயிரம் மகிழ்ச்சியோடு எனக்கு கொரானா இல்லே என்று, எனக்கு கொரானா இல்லை என்று கூவிய படிவந்தார். அவர் மனைவி அவரிடம் முகக்கவசத்தை நன்றாகமாட்டுங்க கொரானா வந்துவிடப்போகுது என்று அதட்டினார். கண்ணாயிரம் மூக்குவரை அதை மாட்டிக்கொண்டார். நாய்குட்டிக்கு சொந்தக்காரர் கண்ணாயிரத்திடம் இருந்த சான்றிதழை வாங்கி பார்த்தார். கொரானா நெகட்டிவ் என்றிருப்பதைபார்த்துவிட்டு நம்ப முடியவில்லை. நான்கால்நடைடாக்டரிடம்கொண்டுகாட்டுகிறேன்என்றார். நாய்குட்டியுடன்காரில்ஏறிசென்றார். கண்ணாயிரமும் சரி, நாமும் வீட்டுக்குப்போகலாமா என்றுமனைவியிடம்கேட்டார். அவர் மனைவி சத்தம் போட்டார். ஏங்க நாய்குட்டி கடிச்சதற்கு ஊசிபோடணுமே வாங்க உள்ளேபோவோம் என்று அழைத்து சென்று டாக்டரிடம் காட்டினார். டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு இன்சக்சன் போட்டுக்கங்க என்று எழுதிகொடுத்தார். ஊசிபோடும் இடத்துக்கு பதட்டத்துடன் சென்றார். அவரது பின்பக்கத்தில் ஊசிபோட்டார்கள். வலிதாங்க முடியவில்லை. இதற்கு அந்தநாயை அடிக்காம இருந்திருக்கலாம் என்று அலுத்துக்கொண்டார். பின்னர் மாத்திரைவாங்கும் இடத்துக்கு சென்று மாத்திரை வாங்கினார். ஏதாவது பாதிப்பு தெரிந்தால் வாங்க என்று சொல்லி அனுப்பினார்கள். கண்ணாயிரம் அந்த மாத்திரையை எப்படி சாப்பிடவேண்டும் என்று விளக்கமாக கேட்டுவிட்டு வெளியேவந்தார். காத்திருந்த ஆட்டோவில் ஏறிஅவரும் அவரதுமனைவியும்வீட்டுக்குசென்றனர். கண்ணாயிரத்தை கடித்த நாய்குட்டியை அதன்உரிமையாளர் கால்நடை டாக்டரிடம் காட்டினார். நாய்குட்டிக்கு காய்ச்சல் அடிக்கிறது என்றுசென்னார். டாக்டர் பரிசோதித்துவிட்டு இது நார்மலானசூடுதான். பயப்பட வேண்டியது இல்ல. நாய்குட்டிக்கு எல்லா இன்சக்சனும் ஏற்கனவே போட்டிட்டிங்கல்ல.. ஒண்ணும் பிரச்சனை இல்ல. எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு என்றார் டாக்டர். அதன்பிறகு நாய்குட்டியை காரில் ஏற்றிவீட்டுக்கு அழைத்துவந்தார். நாய்குட்டிவீட்டில்ஓடிவிளையாடியது. அதைப்பார்த்த தும்அவர்மகிழ்ச்சிஅடைந்தார். இரவுவந்தது. வீட்டின் முன்பகுதியில் நாய்குட்டி படுத்திருந்தது. நள்ளிரவில் அதுதிடீரென்று வித்தியாசமாக கத்தியது. அதைக்கேட்டஅதன்உரிமையாளர்அதிர்ச்சிஅடைந்தார்.வெளியே வந்து பார்த்தார். அதுமனித குரலில் கத்துவதுபோல் அவருக்குகேட்டது. அவருக்குசந்தேகம்ஏற்பட்டது. ஒருவேளை கண்ணாயிரத்தை கடித்ததால் நாய்குட்டிமனிதன் போல்கத்துகிறதோ என்றுபயந்தார். நாய்கடித்துவிட்டது என்றால் மனிதன்தானே நாய்போல் கத்துவாங்க, நாய்மனிதன் போல்கத்துமா என்று நினைக்க தொடங்கினார். அவருக்குதலைசுற்றியது. நாய்குட்டியை தடவி கொடுத்தார். பயப்படாதே நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு போவோம். இது கோரானா காலம். இந்தநேரத்திலே நீ இந்த மனுசங்களை எல்லாம் கடிச்சி வைக்காதே நமக்குதான் பாதிப்பு வரும் புரியுதா என்று நாய்குட்டியிடம் கூறினார். அது ஏதோபுரிந்தது போல்தலையை ஆட்டியது. சரி சத்தம் போடாதே படுத்துக்க காலையில பார்த்துக்கலாம் என்று நாய் குட்டியை தட்டிக் கொடுத்தார். அது சிறிது குரைத்து விட்டு படுத்துதூங்கியது.
விடிந்தது. அப்போதும் நாய்குட்டி வித்தியாசமான குரலில் குரைத்தது. பார்க்க பரிதாபமாகஇருந்தது. உடனே அதன் உரிமையாளர் செல்லநாய்குட்டியை காரில் ஏற்றி மீண்டும் கால்நடைஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். டாக்டர்என்னஎன்றுவிசாரித்தார். உடனே அவர், கண்ணாயிரத்தைகடித்தநாய்குட்டிகண்ணாயிரம்போவே குரைக்கிறது. டாக்டர் என்ன என்று கூறினார். அதை கேட்ட டாக்டர் சிரித்தார். நீங்க சிரிக்காதீங்கடாக்டர் அதுகுரலை கேட்டுபாருங்க என்றார்.
செல்லநாய்குட்டியும்புதிய குரலால் குரைத்தது. டாக்டரும்அதை கேட்டார். நாய்குட்டிக்கு என்னஆச்சு என்று பரிசோதித்து பார்த்தார். அதன் தொண்டையில் ஏதோசிக்கியிருப்பது போல்தெரிந்தது.
நாய்குட்டிக்கு எதுவும் இறைச்சிசாப்பிடக்கொடுத்தீங்களா என்று டாக்டர் கேட்டார்.
அவர் இல்லை என்றார். உடனே டாக்டர், காக்கா எலும்பு துண்டைதூக்கிக் கொண்டு போட்டிருக்கும். அதைநாய் குட்டிவிழுங்கி இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் டாக்டர். பின்னர்நாய்குட்டியின்தொண்டைபகுதியைதடவிபார்த்தார். தொண்டைக்குள் சிக்கியிருந்த எலும்பைவெளியேகொண்டுவரமுயற்சிசெய்தார். சிறிதுநேரத்தில்நாய்குட்டிஎலும்பு துண்டைவெளியேகக்கியது. பின்னர்மகிழ்ச்சியாக குறைத்தது.அதைபார்த்தஅதன்உரிமையாளர்சிரித்தார். டாக்டரும்சேர்ந்துசிரித்தார். அப்பாட பிரச்சினை தீர்ந்ததுநினைத்தார். நாய்குட்டிஅங்குமகிழ்ச்சியாகதுள்ளிவிளையாடியது.

  • வே. தபசுக்குமார். புதுவை……..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.