இந்தியாவில் ஒருநாளில் 60,753 பேருக்கு கொரோனா; 1,647 பேர் சாவு
1 min read
Corona for 60.75 people a day in India; 1,647 deaths
இந்தியாவில் ஒரு நாள் புதிதாக 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,647 பேர் உயிரிழந்தனர்.
குறையும் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
அந்த வகையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,98,23,546 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம் அன்றைய தினம் 97,743 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனையும் சேர்த்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது.
1,647 பேர் சாவு
கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,85,137 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 37-வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 19 ஆக சரிந்துள்ளது.