August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

1 min read

Bihar First-Minister Nitish Kumar admitted to AIIMS Hospital

23.6.2021
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கிறது.

கண் அறுவை

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் டெல்லி சென்றுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது கண் சிகிச்சைக்காக மட்டுமே டெல்லி வந்ததாகவும், இந்த வருகையின்போது பிரதமர் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப் படலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறைந்தது அவர் மூன்று நாட்களாவது டெல்லியில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்யப்பட்டிருக்க வேண்டியது என்றும் கொரோனா பரவல் காரணமாகத்தான் இந்த அறுவை சிகிச்சை செய்ய காலத்தாமதமாகி விட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *