June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

புல்வாமா பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

1 min read

Five Lashkar-e-Taiba terrorists shot dead in Pulwama

2.7.2021

புல்வாமா பகுதியில் என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஜி விஜயகுமார் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *