June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஓம்பிரகாஷ் சவுதாலா விடுதலை

1 min read

Omprakash Chaudhary released on bail

2.7.2021
ஊழல் வழக்கில் சிறை தண்டனைக்கு பெற்ற அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை செய்யப்பட்டார்.

ஓம்பிரகாஷ் சவுதாலா

அரியானா மாநிலத்தில், கடந்த 2000ம் ஆண்டு பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. இதில், ஐ.என்.எல்.டி., எனப்படும் இந்திய தேசிய லோக் தளத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, அவருடைய மகன், அஜய் சவுதாலா உட்பட 56 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதில், ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலை

கொரோன பரவல் காரணமாக, சிறைகளில் நெரிசலை குறைக்க, டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, 7 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, 5 மாதங்களே பாக்கி உள்ளவர்கள், விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த, 2013ல் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்தாண்டு மார்ச்சில், அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா பரவல் காலத்தில், அது இரு முறை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது. தற்போது, டெல்லி அரசின் புதிய உத்தரவை தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை செய்யப்பட்டார்.

கார் மூலம் சொந்த ஊருக்கும் திரும்பும் சவுதாலாவுக்கு, டெல்லி – குருகிராம் எல்லையில், அவரது கார் மீது மலர்களை தூவி, அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *