June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரான் காஷ்மீரில் பறந்து வந்தது

1 min read

The drone, launched from Pakistan, flew over Kashmir

2.7.2021
பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட ஒரு டிரோன் ஸ்ரீநகர் வரை அத்துமீறி நுழைந்து பறந்துவந்தது. அதை துப்பாக்கியால் சுட்டும் தப்பிச் சென்றுவிட்டது.

டிரான்

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மர்மமாக பறந்து வந்த 2 டிரோன்கள் அங்குள்ள விமானப்படைத்தளம் மீது சக்தி குறைந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் ஜம்மு விமானப்படைத்தளத்துக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
தேசிய புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் டிரோன்களை அனுப்பி தாக்கு தலை நடத்தியது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் என்று தெரியவந்தது. இதையடுத்து டிரோன்களை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளிலும் அடுத்தடுத்து டிரோன்கள் பறந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தின. பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்ட ஒரு டிரோன் ஸ்ரீநகர் வரை அத்துமீறி நுழைந்து பறந்துவிட்டு திரும்பி சென்றது.

பாகிஸ்தானில் இருந்து…

இந்தநிலையில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு டிரோன் எல்லை தாண்டி வந்தது. ஜம்மு பிராந்தியத்தில் ஆர்னியா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையைத் தாண்டி அந்த டிரோன் வந்தது. ஜம்முவில் உள்ள ராணுவத்தளங்களை குறிவைத்து அந்த டிரோன் பறந்தது. சரியான நேரத்தில் அந்த டிரோன் வந்ததை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த டிரோனை சுட்டு வீழ்த்த சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. ஆனால் அந்த டிரோன் மிக வேகமாக பறந்து தப்பியது.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து சரமாரியாக சுட்டதால், அந்த டிரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பிச் சென்றுவிட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் டிரோன்களை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காஷ்மீரில் உள்ள அனைத்து முக்கிய ராணுவத்தளங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *