இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி
1 min read
Delta Plus Corona is guaranteed for 56 people so far in India
2.7.2021
நாடு முழுவதும் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா டெல்டா பிளஸ்
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கொரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையின் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
56 பேருக்கு
நாடு முழுவதும் 12 மாநிலங்களை சேர்ந்த 56 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அந்த தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஐதராபாத் பயோ இ நிறுவனத்தில் இந்த தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.