June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மியான்மரில் 25 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொலை

1 min read

25 killed in Myanmar military coup

4.7.2021
மியான்மரில் போராட்டக்காரர்கள் 25 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மியான்மரில் போராட்டம்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதிமுதல் அந்நாட்டு ராணுவம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது. இதனை அடுத்து ஜனநாயக ஆதரவாளர்கள் பலர் ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து முக்கிய நகரங்களில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இதனை அடுத்து அத்துமீறும் ஜனநாயக ஆதரவாளர்களைத் தடுக்கிறோம் என்கிற பெயரில் அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு இதுவரை 890 பேரை சுட்டுக் கொன்றுள்ளது.

மியான்மர் நாட்டு ராணுவத்தின் இந்த கொடூரமான மிகப்பெரிய மனித உரிமை மீறலை பல நாடுகள் எதிர்த்து வருகின்றன.

25 பேர் சுட்டுக்கொலை

இந்த நிலையில் தற்போது யான்கன் நகரில் போராடிய 25 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்டு ஒரு நபரை சுடாமல் சரமாரியாக ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் போராட்டக்காரர்களை சுடுகின்றனர். இதனால் பலர் மீது குண்டு பாய்கிறது. இவ்வாறாக தினமும் கொத்துக்கொத்தாக பல போராட்டக்காரர்களை மியான்மர் ராணுவம் கொன்று குவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஐநா. மனித உரிமைக் கவுன்சில் ராணுவ தலைமை அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து அந்நாட்டில் அமைதியை கொண்டு வரவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *