June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,867 ஆக குறைந்தது; 72 பேர் பலி

1 min read

Corona impact in Tamil Nadu drops to 3,867; 72 killed

4/7/2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 3,867 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ட்டது. கொரோனாவுக்கு இன்று 72 பேர் இறந்தார்கள்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,96,287 ஆக அதிகரித்துள்ளது.

72 பேர் சாவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,382 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35,294 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 445 பேருக்கும், ஈரோட்டில் 349 பேருக்கும், சேலத்தில் 245 பேருக்கும், தஞ்சாவூரில் 227 பேருக்கும், திருப்பூரில் 225 பேருக்கும், சென்னையில் இன்று மேலும் 222 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டனர். தென்காசியல் 26 பேருக்கும், தூத்துக்குடியில் 46 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் கொரோனா இறப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *