சிவசேனா பாரதீய ஜனதாவின் எதிரி அல்ல, நண்பர் தான்” -இருதரப்பு பேட்டியால் பரபரப்பு
1 min read
Shiv Sena is not an enemy of the Bharatiya Janata Party, it is a friend “- Bilateral interview
5.7.2021
“சிவசேனா பாரதீய ஜனதாவின் எதிரி அல்ல, நண்பர் தான்” என்று மரட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அதேபோல் பாரதீய ஜனதாவும் கூறியுள்ளது மராட்டிய மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா உருவான காலத்தில் இருந்தே பாரதீய ஜனதாவுடன் நெருக்கமான உறவே இருந்தது. பல்வேறு கொள்கைகளில் இந்த இரு கட்சிகளுக்கும் ஒத்துப்போகும். அதனால் அவைகள் இரண்டும் பல தேர்தல்களை கூட்டணி அமைத்தே சந்தித்தன. ஆனால் கடந்த சட்டசபைத் தேர்லுக்குபின் அவர்களுக்குள் வரிசல் ஏற்பட்டது.
சிவசேனா ஆட்சி
மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலில் அந்த கூட்டணி வெற்றி பெற்றது. பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிவசேனா 50-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் அகாடி அரசை அமைத்தது.
நண்பன்
இந்த நிலையில், மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் நண்பன் (சிவசேனா) கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்களுடன் சேர்ந்து போட்டியிட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள், நாங்கள் யாரை (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) எதிர்த்து போட்டியிட்டோமோ அவர்களுடன் கைகோர்த்து கொண்டார். எனினும் அரசியலில் சாத்தியமற்றது என்று எதுவும் கிடையாது.
சிவசேனாவும், பா.ஜனதாவும் எதிரிகள் கிடையாது. சில விஷயங்களில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். சூழல்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு நீடிக்கும்
தேவேந்திர பட்னாவிசின் பேச்சு குறித்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் கூறியதாவது:-
நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் கிடையாது. எங்களின் அரசியலில் வெவ்வேறாக இருந்தாலும் நட்பு அப்படியேதான் நீடிக்கும்” என்றார்.
இப்படி இருகட்சி தலைவர்களும் பேசியுள்ளது மராட்டிய மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.