தமிழகத்தில் இன்று 3,479 பேருக்கு கொரோனா; 73 பேர் சாவு
1 min read
Corona for 3,479 people in Tamil Nadu today; 73 deaths
6.7.2021
தமிழகத்தில் இன்று 3,479 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 73 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 46 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 55 நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 3,479 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,041 பேர் ஆண்கள், 1,438 பேர் பெண்கள்.
தற்போது தமிழகத்தில் 3,855 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,35,872 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 73 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்து உள்ளது.
கோவையி்ல் 407 பேருக்கும், ஈரோட்டில் 311 பேருக்கும், சேலத்தில் 228 பேருக்கும், சென்னையில் 209 பேருக்கும், தஞ்சாவூரில் 206 பேருக்கும், திருப்பூரில் 201 பேருக்கம், செங்கல்பட்டில் 189 பேருக்கும், திருச்சியில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 115 பேருக்கும், நாமக்கல்லில் 113 பேருக்கும், நீலகிரியில் 105 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லையில் இன்று 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று யாரும் இறப்பு இல்லை. தென்காசியில் இன்று 19 பேர் பாதித்த நிலையில் 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 40 பேர் பாதித்த நிலையில் ஒருவர் இறந்துள்ளனர்.