தமிழக கவர்னர் நாளை பிரதமரை சந்திக்கிறார்; புதிய கவர்னராக ரவிசங்கர் பிரசாத்?
1 min read
The Governor of Assam, Shri Banwarilal Purohit calling on the Vice President, Shri M. Hamid Ansari, in New Delhi on February 14, 2017.
Tamil Nadu Governor to meet PM tomorrow; Ravi Shankar Prasad as the new governor?
9.7.2021
தமிழக கவர்னர், பன்வாரிலால் நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் தமிழக புதிக கவர்னராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
டெல்லி பயணம்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க பதவியேற்ற பிறகு முதல்முறையாக கவர்னர் டில்லி செல்வது குறிப்பிடத்தக்கது. கவர்னர் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் டெல்லி செல்வதால் அடுத்த கவர்னர் யார் என்பது குறித்து முடிவாகும் என தெரிகிறது. கவர்னர் நாளை டெல்லி செல்வதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கவர்னர்

தமிழகத்தில் புதிய கவர்னராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இவர் மத்திய மந்திரிசபையில் சட்ட மந்திரயாக இருந்தவர். நேற்று முன்தினம் மந்திரி சபை விரிவாக்கம் செய்யும் போது இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுக்கவில்லை.
அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யவதற்கும், இஸ்லாமியர்களின் தலாக் முறையை நீக்குவதற்கும் இவர் மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.