June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

சட்டசபையில் கருணாநிதி படம்; ஜனாதிபதி திறக்கிறார்

1 min read

Karunanidhi picture in the assembly; The President opens

24-7-2021

தமிழக சட்டசபையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை, ஆகஸ்டு 2-ந் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

முதல்வர் மு.கஸ்டாலின், கடந்த 19ம் தேதி டெல்லியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
அப்போது, சென்னை மாகாண சட்டசபை இயங்கத் துவங்கி, 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நடக்க உள்ள, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கவும், சட்டசபையில், கருணாநிதி படத்தை திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று விழாவிற்கு வர, ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சபாநாயகர் அப்பாவு இன்று அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா ஆகஸ்டு 2-ந் தேதி மாலை 5 மணிக்கு, சட்டசபை வளாகத்தில் நடக்க உள்ளது. விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், விழாவிற்கு தலைமை வகிக்கவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கவும், இசைவு தந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *