இந்தியாவில் மேலும் 39,972 பேருக்கு கொரோனா; 535 பேர் பலி
1 min read
Corona for a further 39,972 in India; 535 killed
25.7.2021
இந்தியாவில் மேலும் 39,742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,972 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.20 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 535 பேர் கோவிட் தொற்றுக்கு பலியானார்கள்; இதுவரை 4,20,551 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.36 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் இன்று (ஜூலை 25) காலை 8 மணி நிலவரப்படி 43.31 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 52,68,603 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.