May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு : மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1 min read

27% reservation for OBC in medical studies: MK Stalin’s congratulations

9.7.2021

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருப்பது சமூக நீதி போராட்டத்திற்கான முதல் வெற்றி.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இட ஒட ஒதுக்கீட்டு அறிவிப்பின்படி எம்.பி.பி.எஸ்.,சிற்கு 1,500 இடங்களும் முதுகலை எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு 2500 இடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் இடங்கள் கிடைக்கப்பெறும்
மத்திய அரசின் பணிகள் மற்றும்கல்விநிலையங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டாலும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் படி ஓபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கிடு செய்யப்பட வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கையாகும். அத்தகைய சமூக நீதியை அடையும் வரை தி.மு.க., தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.