June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

1 min read

Extension of time to apply for NEET examination

4.8.2021
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ந் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13-ந்தேதி தொடங்கியது. நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்டு 6-ந்தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

நீட்டிப்பு

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஆகஸ்டு 10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *