June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டம்

1 min read

Afghanistan refugee struggle in Delhi

23.8.2021

டெல்லியில் உள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்பு ஆப்கானிஸ்தான் அகதிகள் போராட்டம் நடத்தினர்.

ஆப்கான் அகதிகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அகதிகளாக வரும் மக்கள் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதிகள் அடையாள அட்டை வழங்குதல், ஆப்கானிஸ்தான் மக்களை மூன்றாவது நாட்டில் (வேறு நாட்டில்) குடியமர்த்துதல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்திய அரசு மற்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தினர்.

21 ஆயிரம் பேர்

போராட்டத்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் வாழும் ஆப்கானியர்கள் அமைப்பின் தலைவர் அகமது ஷியா கானி கூறுகையில், “இந்தியாவில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் உள்ளனர். அவர்கள் தற்போது ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி செல்ல எந்த காரணமும் இல்லை’ என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *