August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் பயங்கரவாதம் விரைவில் முடிவுக்கு வரும்; பரூக் அப்துல்லா நம்பிக்கை

1 min read

Terrorism in Kashmir will end soon; Farooq Abdullah Hope

28/8/2021

காஷ்மீரில் பயங்கரவாதம் விரைவில் முடிவுக்கு வரும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா காஷ்மீரின் ஹண்டர்பெல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சுற்றுலா பயணிகள் நிரம்பிய அந்த நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா பேசியதாவது:-

முடிவுக்கு கொண்டு வருவோம்

காஷ்மீரில் பயங்கரவாதத்தை நாம் விரைவில் முடிவுக்கு கொண்டுவருவோம். நம்பிக்கை வையுங்கள். நாம் வாழவேண்டும் மற்றும் நம் நாட்டையும் நாம் வாழவைக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என்ற போதிலும் இப்பகுதிக்கு வர மக்கள் பயப்படுகின்றனர்.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் இங்கிருந்து திரும்பி உயிருடன் செல்வோமா? இல்லையா? என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் (சுற்றுலா பயணிகள்) இங்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இங்கு வரவேண்டும் என முடிவு எடுத்துள்ளீர்கள். நீங்கள் இங்கிருந்து சென்று உங்கள் நண்பர்களுக்கு இங்கு நீங்கள் கண்ட காட்சிகளை எடுத்துக்கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *